முடி வளர்ச்சிக்கு ஜிங்க் (Zinc) ஏன் அவசியம் என்று உங்களுக்கு தெரியுமா ?








துடிப்பான, ஆரோக்கியமான தாவரங்களால் செழித்து வளரும் பசுமையான தோட்டத்தை கற்பனை செய்து பாருங்கள். இந்த தாவரங்கள் வளர தண்ணீர், சூரிய ஒளி மற்றும் ஊட்டச்சத்துக்கள் அவசியமான ஒன்று. அதே போல் உங்கள் முடி வலுவாகவும், உயிர் நிறைந்ததாகவும் இருக்க ஊட்டச்சத்துக்கள் அத்தியாவசியமானதாகும். அந்த மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று துத்தநாகம். Zinc எனப்படும் இந்த துத்தநாகம் உங்கள் உடலின் ஓட்டுமொத்த ஆரோகியத்திற்கும்  பல நன்மைகளை கொடுக்கிறது.

துத்தநாகம் என்பது நமது அன்றாட உடல் செயல்பாடுகளை பராமரிக்க தேவையான தனிமச் சத்தாகும். உடலில் ஜிங்க் குறைபாடு இருக்கும் நபர்களுக்கு வளர்ச்சி குன்றுதல், வயிற்றுப் போக்கு, முடி உதிர்தல், கண் மற்றும் சரும பாதிப்புகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகிறது.

உடலில் 300 க்கும் மேற்பட்ட என்சைம்கள் (enzymes) உற்பத்திக்கு ஜிங்க் இன்றியமையாதது. எனவே நம் உணவில் போதுமான விட்டமின்களை பெறுவது மிகவும் அவசியம். எனவே ஜிங்க் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 


முடி வளர்ச்சியின் சக்தி மேம்பாடுகள் :

ஜிங்க (zinc) உங்கள்  உடலின் ஆற்றாலதிரணலியாக உள்ளது. இது உங்கள் உடலில் கேரட்டின் (keratin) உற்பத்தி செய்வதிறக்கும் மற்றும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது, செல் டிவிஷன் (cell division) மற்றும் முடி உதிர்வை தடுப்பதிர்க்கு உதவுகிறது. இது நம் உடலில் ஹார்மோன் மற்றும் செரிமானம் சீராக அமைவதற்கும் இது  உதவுகிறது.


வெவ்வேறு முடிகளுக்கு ஜிங்க் (Zinc) எவ்வாறு நன்மை அளிக்கிறது :

வறண்ட முடி  (Dry Hair)

ஜிங்க் (zinc) உச்சந்தலை பகுதியே சீராக வைதிறக்கவும் மற்றும் எரிச்சல்,பொடுகு, உச்சந்தலை வரட்சியே சரிசெய்கிறது. தலை பகுதயில் எண்ணெய் இல்லாமல் அரிப்பு ஏற்பட கூடுலாம் இதற்க்கு ஈரப்பதத்தை கொடுத்து  இதனை சரிசெய்வதில் ஜிங்க் (zinc) முக்கிய பங்கு வகிக்கிறது. 

எண்ணெய்பசை முடி (Oily Hair) :

‌ஜிங்க் (zinc) உங்கள் உச்சதலையில் உள்ள அதிக எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தி தலைமுடியை  துசி, பொடுகு, அரிப்பு, போன்ற பிரச்சனைகளில்  இருந்து பாதுகாக்கிறது. 

சுருள் முடி (curly hair)  :

சுருள் முடி என்பது ஈர பதம் அல்லாத முடிய குறிக்கிறது ஜிங்க் (zinc) ஈரப்பதத்தை கொடுத்து முடியை பாதுகாக்கிறது. 

ஜிங்க் ( Zinc ) தனித்துவமான நன்மைகள்

  • ஜிங்க் (zinc) உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியே அதிகரிக்க உதவும் மற்றும் நோய்களிடம் இருந்து உங்களை  பாதுகாக்கும். 
  • உடலில் உள்காயங்கள் (அல்சர், வாய்புண்,) ஏற்பட்டால் அதை குணபடுதுவதில் ஜிங்க முக்கிய பங்கு ஆற்றுகிறது மற்றும் உடலில் வெளி  காயங்கள் (கீறல்,காயம்) ஏற்பட்டாலும்  அதை சறிசெய்ய  ஜிங்க் (Zinc) உதவுகிறது. 
  • என்சைம்கள் (Enzyme Function) செரிமானம் மற்றும் ஹார்மோன் பிரித்தல் மற்றும் 300 க்கும் மேற்பட்ட (enzyme) நம் உடலில்  செயல்படுத்த ‌ஜிங்க் (zinc) உதவியாக இருக்கிறது. இது நம்  உடலில் கெமிக்கல் எதிர்வினை (chemical  reactions) வேகமாக செயல்பட வைக்கிறது.  

ஜிங்க் (Zinc) அதிகம் நிறைந்த உணவு வகைகள்:



இறைச்சி : மாடு, ஆடு, பன்றி இறைச்சிகளில் அதிக அளவு ஜிங்க் (zinc) உள்ளது. இது சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கின்றது. ஜிங்க், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது, முடி உதிர்தலை தடுக்கிறது. 

கடல் உணவுகள் : சிப்பி, நண்டு மற்றும் இறால் போன்ற கடல் உணவு வகைகளில்  ஜிங்க் (zinc) அதிகம் நிறைந்து இருப்பதால், இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், புதிய முடி வளர்ச்சியையும் தூண்டுகிறது. 

பருப்பு வகைகள்: கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் பீன்ஸ் வகைகளில் அதிக அளவில் ஜிங்க் உள்ளது. இது உங்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பருப்பு வகைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி உதிர்வை தடுக்கிறது மேலும், முடி வளர்ச்சியையும்   தூண்டுகிறது. 

விதைகள்:  பூசணி விதைகள், எள், மற்றும் முந்திரி போன்ற விதைகளில் அதிக அளவு ஜிங்க் உள்ளது. இது முடி வலிமையை அதிகரித்து முடி உதிர்வை தடுக்கிறது. விதைகளில் இருக்கும் ஒமேகா 3 முடி மற்றும் முடி வேர்களை வலிமையாக்குகிறது மேலும் வேர்களை  வலுப்படுத்துகிறது. 

பால்:  பால், பாலாடைக்கட்டி (paneer) மற்றும் தயிர் ஆகியவற்றில் ஜிங்க், புரோபயாடிக்ஸ் (probiotics) மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளன. இவை முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. பால் மற்றும் அதன் பொருட்கள் வலிமையை அதிகரிக்கவும், முடி வறட்சி மற்றும்  அடர்த்தி சரி செய்யவும் உதவுகின்றன. 


ஜிங்க் (zinc)  எவ்வாறு மற்ற வைட்டமின்களுடன் செயல்படுகிறது :

ஜிங்க் தனியாக வேலை செய்வதற்கும் மேல், மற்ற முடி விட்டமின்களுடன்(hair vitamins) சேர்ந்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக வேலை செய்கிறது!

பயோட்டின் (Biotin) : ஜிங்க் (zinc)  மற்றும் பயோட்டின் இவை இரண்டும் சேர்ந்து முடியை அடர்த்தி ஆக்குவது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியை தூண்டவும்  உதவுகிறது.     

கிரீன் டீ (extract) : முடி வேர்கள் (hair follicles) வலிமையாக்குவது மட்டுமின்றி கிரீன் டீ உங்கள் முடியை பலப்படுத்தி வளர்ச்சியை தூண்டுகிறது. 

வைட்டமின் சி (‌Vitamin C) : நம் உடல் வைட்டமின் C, ஜிங்க் உறிஞ்சலை (absorption) அதிகரிக்கிறது. இவை இரண்டும் ஒன்றாக செயல்படும் போது முடி வளர்ச்சிக்கு மேலும்  ஆரோக்கியம் அளிக்கிறது

ஆளி விதை (Flax seed)  : 

முடி உதிர்வுக்கு சில சமயங்களில் ஹார்மோன் கூட காரணமாக இருக்கலாம், ஆளி விதை (Flax seed) ஹார்மோன்களை  சமநிலை படுத்தி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. 


குறிப்பு  :

அதிக அளவுக்கு ஜிங்க் (Zinc)  (40 மி. கி/நாளுக்கு மேல்) எடுத்து கொண்டால் அது நம் உடலில் மற்ற வைட்டமின் மற்றும் மினரல்ஸ் உறிஞ்சும் தன்மையே குறைத்துவிடுகிறது. மேலும்  குமட்டல்,    தசை  பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும். தாமிர குறைபாடு, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் காலப்போக்கில் ஊட்டச்சத்து சமநிலையின்மைக்கும் வழிவகுக்கும். எப்போதும் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளைப் பின்பற்றுங்கள் அல்லது அதிக அளவை எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஒரு சுகாதார நிபுணரை அணுகுங்கள்.


முடிவுரை :

துத்தநாகம் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும், இது ஆரோக்கியமான முடியைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி வளர்ச்சியை ஆதரிப்பது மற்றும் முடி உதிர்தலைத் தடுப்பது முதல் சீரான உச்சந்தலையில் சூழலை உறுதி செய்வது வரை, அதன் நன்மைகள் மறுக்க முடியாதவை. சேதமடைந்த திசுக்களை சரிசெய்ய உதவுவதன் மூலமும், எண்ணெய் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிப்பதன் மூலமும், துத்தநாகம் வலுவான, துடிப்பான முடிக்கு உகந்த நிலைமைகளை உருவாக்க உதவுகிறது. உணவு அல்லது சப்ளிமென்டுகள் மூலம், போதுமான அளவு துத்தநாகத்தை உட்கொள்வதை உறுதி செய்து உங்கள் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.